Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“கருப்பு எம்.ஜி.ஆரே. உங்களிடம் அடிவாங்க காத்திருக்கிறேன்” - விஜயகாந்த் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் உருக்கம்!

08:29 AM Dec 02, 2023 IST | Web Editor
Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற்று வரவேண்டி நடிகர் மன்சூர் அலிகான் உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.  அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு  வருகிறார். கடந்த 18-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.  ஆனால் தற்போது அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால்,  அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்பட்டது. அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து விஜயகாந்தின் உடல் நிலை, ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது எனவும், தொடர்ந்து ஒரு நேரம் போல் மற்றொரு நேரம் அவருடைய உடல் நிலை இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சளி அதிகமாக உள்ளதால் சுவாசத்தில் அவ்வப்போது சிரமம் ஏற்படுகிறது என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தனது வேண்டுதலை உருக்கமான அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 

“அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்கள் மன்சூரலிகான் அழுகிறேன். நன்றாகி வாங்கண்ணே!! கேப்டன் நடனக்காரனான என்னை நாடறியச்செய்த திருமலை நாயக்க நாயகனே! எதிர்நாயகனை அடிக்கவே விடாது, பில்டப் செய்தும் டூப் போட்டும் சூப்பர்மேனாய் கதாநாயகர்கள் வலம் வந்த காலத்தில், திருப்பி அடி, பறந்து அடி, என தாங்களை உதைக்க வைத்து, திருப்பி காற்றிலே பறந்து ஒரு கழுதை உதை உதைப்பீர்களே! அண்ணே! இனி எப்ப வந்து உதைப்பீர்கள்? மதுரை மீனாட்சி அம்மன் தூண்கள் போன்று இருக்கும் கால்கள் மெலிந்ததேனோ மன்னவனே! நாயகிகளை, துரத்த வைத்து, கடத்த வைத்து, சில்மிஷம் செய்ய வைத்து. ஓடி. ஆடி... உழைப்பை பிழிய வைத்தவனே! சாப்பிடுகிற சோறு உடம்பில் ஒட்ட வைத்தவனே! நீவீர் வாழ்வீர் நூறாண்டு. 

யாரோ தவறாக வீடியோவை கட் செய்து அனுப்பிவிட்டனர் கடவுளிடம். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இங்குளர் நிறைய. கருப்பு எம்.ஜி.ஆரே. ஆயிரக்கணக்கானரை வாழவைத்த ஆலவிருட்சமே! மக்களோடுதான் கூட்டணி என்றாய்! எங்கள் மாநகர காவலனை, பூந்தோட்ட காவல்காரனை. வேதனைக்கு உள்ளாக்காதீர் இறைவா. இன்னல்களை இலகுவாக்கு!! கேப்டனை மருத்துவத்தில் மீட்டு புரட்சிக் கலைஞராய் ஒப்படை! நண்பன் ராவுத்தருக்காக தர்கா சென்றவரை, அவரின் ரசிக, ரசிகையர் பக்தர்களுக்காக பத்திரமாக தா... 100வது படம் எந்த நாயகர்களுக்கும் ஓடியதில்லை: தாங்களது 100வது படத்தில் முதல் வாய்ப்பளித்து வெற்றி திருமகளை மாலையிட வைத்த பிரபாகரனே... வாழிய வாழிய நூறாண்டு'!! தாங்களிடம் அடிவாங்க காத்திருக்கும் தம்பி மன்சூரலிகான்!” என கண்ணீருடன் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Tags :
captainDMDKMansoor AliKhanNews7Tamilnews7TamilUpdatesVijayakanth
Advertisement
Next Article