For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கைகளில் கருப்பு பட்டை... #ManmohanSingh மறைவுக்கு இந்திய வீரர்கள் மரியாதை!

09:17 AM Dec 27, 2024 IST | Web Editor
கைகளில் கருப்பு பட்டை     manmohansingh மறைவுக்கு இந்திய வீரர்கள் மரியாதை
Advertisement

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

Advertisement

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில், 3 டெஸ்ட் போட்டிகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

இதையும் படியுங்கள் : “வழிகாட்டியை இழந்துவிட்டேன்” – முன்னாள் பிரதமர் #ManmohanSingh மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்!

இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று (டிச.26) தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆட்டத்தின் 2ம் நாளான இன்று தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகள் 474 ரன்கள் எடுத்துள்ளது. மேலும், 1 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில், 2ம் நாள் ஆட்டத்தின்போது இந்திய அணி வீரர்கள் கைகளில் கருப்பு பட்டை கட்டி விளையாடி வருகின்றனர். இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மறைந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

Advertisement