Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மக்களின் நம்பிக்கையை பாஜக காப்பாற்றும்” - நெல்லையில் பிரதமர் மோடி பேச்சு!

01:17 PM Feb 28, 2024 IST | Jeni
Advertisement

மக்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் காப்பாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார்

Advertisement

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பாஜக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,  மத்திய இணையமைச்சர் எல்.முருகன்,  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன்,  காந்தி,  வானதி ஸ்ரீனிவாசன்,  மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன்,  ஹெச். ராஜா,  தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன்,  சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ‘நெல்லையப்பர் தேர்’ போன்ற நினைவுப் பரிசினை பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் வழங்கினர்.  இதையடுத்து நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதாவது :

“அனைவருக்கும் வணக்கம்.  நெல்லையப்பருக்கும் காந்திமதி அம்பாளுக்கும் வணக்கம். உங்களோடு நெல்லையில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  நெல்லை அல்வாவைப் போன்ற இனிமையான உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.  அனைத்து தரப்பினரும் பாரதிய ஜனதா கட்சியின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.  பாஜகவின் நேர்மறை அரசியலை அனைவரும் நம்புகிறார்கள்.  தமிழக மக்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் காப்பாற்றும்.  இது பிரதமர் நரேந்திர மோடியின் கேரண்டி.

இதையும் படியுங்கள் : “3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்” - உத்தரவாதம் அளித்த பிரதமர் மோடி

தமிழ்நாடு மக்கள் எதிர்காலத்தைப் பற்றிய தெளிவுடன் இருக்கின்றனர்.  இதுதான் தமிழ்நாடு மக்களை பாஜகவுடன் நெருக்கமாக்குகிறது.  பாஜகவின் சிந்தனையும், தமிழ்நாட்டு மக்களின் சிந்தனையும் ஒன்றாகிறது.  இது பாஜக மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.”

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Tags :
BJPElection2024Elections2024LokSabhaElectionNarendramodipalayamkottaiParliamentElectionPMOIndiaTirunelveli
Advertisement
Next Article