Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஜார்க்கண்டில் மத கலவரங்களை உருவாக்க பாஜக திட்டம்" - முதலமைச்சர் #HemantSoren குற்றச்சாட்டு!

09:10 AM Sep 26, 2024 IST | Web Editor
Advertisement

இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே முரண்பாடுகளை விதைத்து, கலவரங்களை உருவாக்க பாஜக விரும்புகிறது என ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.

Advertisement

ஜார்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. இந்த சூழலில், அங்கு ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கட்சி சாா்பில் சாஹிப்கஞ்சில் உள்ள போக்னாடி பகுதியில் நேற்று (செப்.25) பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ராஞ்சியில் இருந்தவாறு காணொலி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது,

"ஆா்எஸ்எஸ் அமைப்பு எலிகளைப் போல் படையெடுத்து மாநிலத்தை அழித்து வருகிறது. இதுபோன்ற சக்திகள் உங்கள் கிராமங்களுக்குள் நுழைந்தால் உடனடியாக அடித்து விரட்ட வேண்டும். பாஜக தேர்தலுக்கு முன் இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே முரண்பாடுகளை விதைத்து, கலவரங்களை உருவாக்க விரும்புகிறது.

மேலும், இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே வெறுப்புணா்வை வளா்ப்பதை பாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது. வணிகா்கள் மற்றும் தொழிலதிபா்களுக்கான கட்சியான பாஜக, பிற கட்சித் தலைவா்களை விலை கொடுத்து வாங்கி வருகிறது. அசாமில் உள்ள பழங்குடியினா் பல கொடுமைகளை எதிா்கொள்கிறாா்கள். ஆனால் அசாம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சா்மா, ஜாா்க்கண்ட் பழங்குடியினரின் நலன் குறித்து பேசி வருகிறாா்."

இவ்வாறு ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.

Tags :
assembly electionBJPHemant SoranJharkhandnews7 tamilRSS
Advertisement
Next Article