For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”நாட்டின் பன்முகத்தன்மை காக்க பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

09:47 PM Apr 03, 2024 IST | Web Editor
”நாட்டின் பன்முகத்தன்மை காக்க பா ஜ க  அரசை வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்”  முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

”நாட்டின் பன்முகத்தன்மை காக்க பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்”  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.  

Advertisement

18 வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. எனவே அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவுடன்,கம்யூனிஸ்ட்., மதிமுக, விசிக உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன. சமீபத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியானது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று திருவண்ணாமலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

இன்றைய பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:

தி.மு.க.வையும் திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாது; இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது இங்குதான். இந்த தேர்தல் களம், இரண்டாவது விடுதலைப் போராட்டம். இந்தியா என்ற அழகிய நாட்டை, அழித்துவிடாமல் தடுக்க, ஜனநாயக போர்க்களத்தில் இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

ஜனநாயக போர்க்களத்தில் மனசாட்சியும் மக்களுமே என்றும் எஜமானர்கள். இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். பா.ஜ.க. ஆண்டதும் போதும்.. மக்கள் மாண்டதும் போதும். சமூகநீதி காக்க ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும் பொய், புரளியை கிளப்பி வாக்கு வாங்க நினைக்கிறார் பிரதமர் மோடி. அரசியல் சட்டம் காக்க, பன்முகத்தன்மை காக்க பா.ஜ.க. அரசை முதலில் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். உத்தர பிரதேசத்தில் போய் கச்சத்தீவு பற்றி பேசும்போதே, பிரதமர் மோடி குழப்பத்தில் இருப்பது தெரிகிறது.

இது ஏப்ரல் மாதம்தான், மோடியின் குழப்பம் ஜூன் மாதத்தில் தீர்ந்துவிடும். ஜூன் 3-ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நிறைவு, ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடுதலையின் தொடக்கம். 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? என தொடர்ந்து மக்களின் குரலாக கேட்டு வருகிறேன்.

ஆனால், அங்கிருந்து எந்த பதிலும் இல்லை. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை பிச்சை என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். இதுமாதிரி பதில் அளிப்பதற்காகவே, அவரை பிரதமர் மோடி மந்திரியாக வைத்திருக்கிறார். சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக வெளிநாட்டு வங்கிகள் கடன் அளிக்கின்றன. அதை திரும்ப செலுத்தப் போவது தமிழ்நாடு அரசுதான்.

ஆனால், நிர்மலா சீதாராமன் கணக்கு கேட்கிறார். மிக்ஜம் புயல், தென்மாவட்ட மழை வெள்ளம் ஆகிய பேரிடர்களுக்கு மாநில அரசு நிதியைதான் கொடுத்தோம். எதற்குமே நிதி கொடுக்காத நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடியைப் போல வாயாலே வடை சுடுகிறார். மக்களை தப்பு கணக்கு போடாதீர்கள். நீங்கள் சொல்வதை மக்கள் நம்ப மாட்டார்கள் என தெரிவித்தார்.

Tags :
Advertisement