தமிழ்நாட்டுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் மார்.23 ஆம் தேதி வெளியீடு?
06:15 PM Mar 19, 2024 IST
|
Web Editor
இந்நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதனையடுத்து கடந்த 13 ஆம் தேதியன்று 2 ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. ஆனால் இந்த இரு பட்டியலிலும் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் பாமகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ள பாஜக தமிழ்நாடு வேட்பாளர்கள் பட்டியலை வரும் மார்ச் 23 ஆம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.
Advertisement
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வரும் மார்ச் 23 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் ஏற்கனவே இரண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து அடுத்தக்கட்ட வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு 23-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Next Article