பாஜக பரப்புரை வாகனத்தில் இருந்த அதிமுக கொடி - அகற்றச் சொன்ன எல்.முருகன்!
பாஜக பரப்புரை வாகனத்தில் இருந்த அதிமுக கொடி எல்.முருகன் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாதக ஆகியவை களத்தில் உள்ளன. இந்த கட்சிகளின் கூட்டணிகளில் பல கட்சிகள் இணைந்துள்ளன.
எல்.முருகன் போட்டியிடுகிறார். இதனையடுத்து இன்று உதகை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார்.
இதற்காக இன்று காலை முகாம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் உதகை மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்பு ஐந்து லாந்தர் பகுதியில்
தனது தேர்தல் பரப்புரையை துவங்கினார். அப்போது தனது தேர்தல் பரப்புரை வாகனத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் பொருத்தப்பட்டு இருந்ததை பார்த்தார்.