பாஜக காஞ்சிபுரம் மாவட்ட OBC பிரிவு தலைவரான படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபல ரவுடியான படப்பை குணா மீது குண்டர் தடுப்பு
சட்டம் பதிவு செய்யப்பட்டது
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் படப்பை குணா என்கிற குணசேகரன். இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட 42க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. காஞ்சிபுரம் சரக A+ சரித்திர பதிவேடு குற்றவாளியான மதுரமங்கலம் பகுதியை
சேர்ந்த பிரபல ரவுடி குணா (எ) படப்பை குணா மீது சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு\ காவல்நிலையத்தில் கொலை , கொலை முயற்சி, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் பாஜகவில் இணைந்த படப்பை குணாவுக்கு
பாஜகவில் மாவட்ட OBC பிரிவு தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த மாதம் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியரிடம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சுங்குவார்சத்திரம் அடுத்த பாப்பாங்குழி பகுதியில் விமல் என்கிற இளைஞரிடம்
கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டு பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது பூந்தமல்லி சிறையில் இருக்கும் படப்பை குணா மீது ஒழுங்கு நடவடிக்கை மீறியதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.