Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“விடுதலைக்கு பின் 60 ஆண்டுகளில் செய்யாதவற்றை பாஜக 10 ஆண்டுகளில் சாதித்துள்ளது” - பீகாரில் பிரதமர் மோடி பேச்சு!

01:52 PM Apr 07, 2024 IST | Web Editor
Advertisement

நாடு விடுதலையடைந்த பின், 60 ஆண்டுகளாக செய்ய முடியாதவற்றை பத்தே ஆண்டுகளில் பாஜக சாதித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

பீகார் மாநிலத்தில் இன்று(ஏப். 7) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

“தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் முழுவதும் வெற்றி பெறப்போகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வலுவான அரசு நாட்டுக்காக துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு விடுதலையடைந்த பின், 60 ஆண்டுகளாக செய்ய முடியாதவற்றை பத்தே ஆண்டுகளில் சாதித்துள்ளோம்.

’இந்தியா’ கூட்டணி தலைவர்கள் யாரும் அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கவில்லை என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. நான் அளித்த வாக்குறுதிகளால் ‘இந்தியா’ கூட்டணி வாயடைத்துப் போயுள்ளது. என்னுடைய நோக்கம் தூய்மையானது என்பதால் வாக்குறுதி அளிக்கிறேன். அதை நிறைவேற்ற கடுமையாக உழைக்கிறேன்.

‘இந்தியா’ கூட்டணியில் உள்ளவர்கள், இதை புரிந்து கொள்ள மாட்டார்கள். தேர்தலில் பொய் சொல்லி வாக்கு சேகரிப்பதில் பெயர் பெற்றவர்கள்” என்று பேசினார்.

Tags :
BiharBJPElection2024Elections2024Narendra modiNews7Tamilnews7TamilUpdatesPMO IndiaPoliticsTamilNadu
Advertisement
Next Article