கோவை தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு! 100 வாக்குறுதிகள் 500 நாட்களில் நிறைவேற்றப்படும் என உறுதி!
கோவை தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டதோடு 100 வாக்குறுதிகள் 500 நாட்களில் நிறைவேற்றப்படும் என கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும் பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அண்ணாமலை பேசியதாவது:
12 நபர்களை சாட்சியாக இந்த தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறோம். இந்த 12 பேரும் தேர்தல் அறிக்கையை பெற்று கொள்கிறார்கள். இந்த 100 வாக்குறுதிகளும் 500 நாட்களில் நிறைவேற்றபடும்.
- கோவை விமான நிலையத்தை உலகத் தரத்திற்கு விரிவாக்கம் செய்து நவீனமயமான விமான முனையமாக மாற்றுவோம்.
- மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும்
- கோவையில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்படும்
- அத்திக்கடவு அவிநாசி 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்.
- ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்.
- தமிழ்நாட்டில் இரண்டாவது Indian Institute of Management (IIM) கோவையில் நிறுவப்படும்.
- கோவையில் தங்க நகை பட்டறை பூங்கா அமைக்கப்படும்
- மோட்டார் வாகன ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்
- கொங்கு மண்டலத்தில் மத்திய அரசின் புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்படும்.
- கோவையில் பிரதமரின் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை 250-ஆக உயர்த்தப்படும்.
- கோவையின் ஜீவநதியான நொய்யல் நதியை தூய்மைப்படுத்தி கோவையின் நீர் வளத்தை மேம்படுத்துவோம்
- கோவையில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்
- கோவையில் சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்
- உயர்நீதிமன்ற கிளை மதுரையை போன்று கோவையிலும் அமைக்கப்படும்
- காமராஜர் பெயரில் 3 புட் பேங்குகளை உருவாக்குவோம்
- கோவையில் என்.ஐ. ஏ கிளை அலுவலகத்தை திறப்போம்
- கோவையில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
- ஐந்தாண்டுகள் முடியும் போது உலக வரைபடத்தில் கோவை மாநகரம் தனி அடையாளத்துடன் இருக்கும்
இதே போன்று கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதோடு, 2 026-ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் போது டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்பட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும். மேலும் இந்த வாக்குறுதிகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுவோம்.
இவ்வாறு பாஜக மாநிலத்தலைவரும், கோவை நாடாளுமன்ற வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்தார்.