Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராமர் கோயில் கட்டப்பட்ட ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தோல்விக்கு காரணம் என்ன?

10:45 AM Jun 06, 2024 IST | Web Editor
Advertisement

அயோத்தி ராமர் கோயிலை முன்னிலைப்படுத்தி நாடு முழுவதும் பாஜக பிரசாரம் மேற்கொண்ட நிலையில்,  அக்கோயில் அடங்கிய ஃபைசாபாத் தொகுதியிலேயே தோல்வியை சந்தித்தது. 

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.  இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்,  காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது .  INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

பாஜக தலைமையிலான கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றி இருந்தாலும்,  உத்தரப் பிரதேச மாநிலம் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது.  அயோத்தி கோயிலை முன்னிலைப் படுத்தி நாடு முழுவதும் பாஜக பிரசாரம் மேற்கொண்ட நிலையில்,  அக்கோயில் அடங்கிய ஃபைசாபாத் தொகுதியிலேயே தோல்வியை சந்தித்துள்ளது.

பாஜக வேட்பாளர் லல்லு சிங்கை விட 54,567 வாக்குகள் அதிகம் பெற்று சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார்.  பாஜக வேட்பாளர் லல்லு சிங்  4,99,722 வாக்குகளையும்,  சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 5,54,289 வாக்குகளையும் பெற்றனர்.

பாஜக வேட்பாளர் லாலு சிங்

ராமா் கோயில் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் கூறுகையில் "அயோத்தி தோ்தல் முடிவு அதிா்ச்சியளிக்கிறது.  ராமரின் அருளால் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராகவுள்ளாா்" என்றாா்.  அயோத்தி நகர பாஜக மேயா் கிரிஷ்பாட்டீ திரிபாதி பேசுகையில்,  "மக்களவைத் தோ்தல் முடிவு எங்களுக்கு அதிா்ச்சியளிக்கிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.  அயோத்தியை பொருத்தவரை எதிா்க்கட்சிகள் சாதிரீதியிலான வியூகத்தை கையாண்டுள்ளன.  நாங்கள் அதை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம்" என்றாா்.

இதுகுறித்து பாபா் மசூதி வழக்கில் மனுதாரா்களில் ஒருவரான இக்பால் அன்சாரி கூறுகையில்,  "அயோத்தியில் ஏராளமான துறவிகளும்,  மகான்களும் உள்ளனா்.   இந்த முடிவை கடவுளின் விருப்பமாக கருதிக் கொள்ளலாம்.  அயோத்தியில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவு தான்.  வெற்றியோ,  தோல்வியோ எதுவானாலும் அது இந்துக்களின் வாக்குகளால் தான்" என்றாா்.  அயோத்தி வாக்காளா்களக்காக எதுவும் செய்யாத எம்.பி-யை மீண்டும் களமிறக்கியதே பாஜகவின் தோல்விக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

Tags :
ayothiBJPElections ResultsElections Results2024Lok Sabha ElectionLok Sabha Election2024
Advertisement
Next Article