Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பெரியார், அண்ணா, கருணாநிதி எதிர்கொள்ளாத சவாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கொள்கிறார்" - ஆ. ராசா எம்.பி பேச்சு!

09:03 AM Mar 03, 2024 IST | Web Editor
Advertisement

"பெரியார், அண்ணா, கருணாநிதி எதிர்கொள்ளாத சவாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கொண்டு வருகிறார் " என திமுக சார்பில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் ஆ.ராசா எம்.பி.  தெரிவித்துள்ளார். 

Advertisement

தமிழ்நாடு முழுவதும் மாநகரம் மற்றும் நகரங்களில் மார்ச் மாதம் 2,3 மற்றும் 4 தேதிகளில் திமுக சார்பில் 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை குறித்த விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நேற்று கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் தனியார் திரையரங்கு அருகே திமுக சார்பில் 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ. ராசா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதையும் படியுங்கள் : “பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் பட்டியலினத்தவர்கள் பழங்குடி மக்கள் அதிகம் இருப்பது வரவேற்கத்தக்கது” – சபாநாயகர் அப்பாவு பேட்டி!

அவர் பேசியதாவது..

"தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். மொழிக்காகவும், இனத்துக்காகவும் தனது 23 வது வயதில் சிறைக்கு சென்றவர் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து, கட்சியிலும், ஆட்சியிலும் படிப்படியாக வளர்ந்து தான் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, கடந்த ஆட்சியில் ரூ. 5 லட்சம் கோடி கடனை வைத்து சென்றனர். கொரோனா ஒரு புறம், கடன் ஒருபுறம் இருந்த போது பொறுப்பேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆட்சி பொறுப்பேற்ற ஒரு ஆண்டில் கடனை அடைத்து, கொடுத்து வாக்குறுதியை நிறைவேற்றினார். கொரோனா காலத்தில் அனைவரும் பாதிக்கப்பட்ட நிலையில் அனைத்து குடும்பத்தாருக்கும் ரூ. 4,000 நிதி வழங்கினார். அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கு சென்று ரூ. 8 லட்சம் கோடி மதிப்பீட்டில் திட்டங்களை கொண்டு வந்தார். அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மட்டுமின்றி மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.

சாலையோரம் மரங்களை வைத்தும், ஏரி,குளங்களை தூர்வாரிய அசோகருக்கு பிறகு அனைத்து ஏரிகளையும் தூர்வாரிய பெருமை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை சேரும். பாஜவினரை கட்டிப்போட்ட பெருமையும் கருணாநிதியை சேரும். அவர் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ய கூடாது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கூடாது, பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டக்கூடாது என்ற 3 ஒப்பந்தத்தை போட்ட பின்பே வாஜ்பாய் தலைமையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார்.

ஒட்டுமொத்த இந்தியாவில் மதவாதம் தலைவிரித்து ஆடுகிறது.நாடாளுமன்றத்திற்கு
பிரதமர் வருவதே இல்லை. அரசு விமானத்தில் அழைத்து சென்று கார்பரேட்
நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் பெற்று தந்தவர் தான் பிரதமர் மோடி. நாடாளுமன்றத்தில்
இதுகுறித்து நாங்கள் குரல் எழுப்பினோம். இதற்கு இதுவரை பிரதமர் மோடி பதில்
அளிக்கவில்லை. இங்கிலாந்து செய்தி நிறுவனம், குஜராத்தில் நடைபெற்ற கொடுமைகள் குறித்த செய்தி வெளியிட்டது. இது குறித்த கேள்விக்கும் இதுவரை பதில் இல்லை.

பெரியார், அண்ணா, கருணாநிதி எதிர்கொள்ளாத சவாலை தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் எதிர்கொண்டு வருகிறார். பல மொழி, பல தேசிய இனம் கொண்டது தான்
இந்த நாடு. பழக்க வழக்கம், மொழி வேறு வேறாக இருந்தாலும் வேற்றுமைக்குள்
ஒற்றுமை காண்பதே தமிழ்நாடு.

விஷ்வகர்மா திட்டத்திற்கு ரூ. 35 லட்சம் கோடி நிதியை ஒதுக்கி உள்ளது. குலத்தொழில் திட்டத்தை கொண்டு வந்து, சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட மக்களை  முன்னேற விடாமல் இருக்கும் திட்டம் தான் இது.  இந்தியாவை இந்து நாடாக மாற்ற திட்டமிட்டு வருகின்றனர். பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இந்தியாவை காப்பாற்ற துடிக்கும் ஒரே தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்"

இவ்வாறு திமுக ஆ. ராசா எம்பி தெரிவித்துள்ளார்.

Tags :
ARazaMPBJPCHIEF MINISTERCMOTamilNaduDMKElection2024KarunanidhiMKStalinspeech
Advertisement
Next Article