Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"அதிமுக வாக்காளர்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளது" - " முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு!

06:15 PM Apr 18, 2024 IST | Web Editor
Advertisement

"அதிமுக வாக்காளர்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளது"  என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு முன்வைத்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்றுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இதையும் படியுங்கள் : “Gpay மூலம் வாக்காளர்களுக்கு அண்ணாமலை பணம் பட்டுவாடா” – திமுக வழக்கறிஞர் சரவணன் குற்றசாட்டு!

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர் கூறியதாவது :

"நாங்கள் எப்பொழுது பண நாயகத்தை நம்பி இல்லை. ஜனநாயகத்தை நம்பி தான் இருக்கிறோம்.  பாஜக மற்றும் திமுக பணத்தை நம்பி தான் இருக்கிறார்கள். இந்த இரு கட்சியினரும் பணத்தின் மூலம் வாக்குகளை பெற்றுக் கொள்ளலாம் என நப்பாசையில் உள்ளனர்.

கொள்ளையடித்த பணத்தைதான் வாக்காக மக்களிடம் வழங்கி வருகின்றனர். பொதுமக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு தேவையான வேட்பாளருக்கு வாக்கு செலுத்த உள்ளனர். வடசென்னையின் பொறுப்பாளராக நான் வடசென்னை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தேன்.

அதிமுக-விற்கு வாக்களிக்கும் நபர்களை குறி வைத்து வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயர் நீக்கப்படுகிறது.தேர்தல் அதிகாரிகள் இந்த தேர்தலில் அது போன்று நடைபெறாமல் தடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்"

இவ்வாறு இவர் தெரிவித்தார்.

Tags :
ADMKAIADMKElection2024ElectionCommissionElectionswithNews7tamilformer minister jayakumarTamilNaduTNElection
Advertisement
Next Article