குமரன்குன்று முருகன் கோயில் மலைப்பகுதியில் விஷம் வைத்து கொல்லப்பட்ட பறவைகள்... போலீசார் விசாரணை!
மேட்டுப்பாளையம் அருகே குமரன்குன்று கோயில் மலைப்பகுதியில் உணவில் விஷம் வைத்து மயில் உள்ளிட்டவை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள குமரன்குன்று பகுதியில் பழமை
வாய்ந்த அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயில் மலைகுன்றின் மேல் அமைந்துள்ளது. இக்கோயில் பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் கோயிலைச் சுற்றி மயில், மைனா, சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட பறவை வகைகள் வாழ்ந்து வருகின்றன.
அது மட்டுமல்லாமல் இந்த மலையைச் சுற்றி, பொதுமக்கள் கால்நடை வளர்ப்பிலும்
ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த மலையைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதை
பகுதியில், மர்ம நபர்கள் அசைவ பிரியாணியில் விஷத்தை கலந்து பல்வேறு
இடங்களில் தட்டுகளில் வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனை சாப்பிட்ட மயில், மைனா உள்ளிட்ட பறவைகள் பல்வேறு இடங்களில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.