"ரூ.18 லட்சம் மதிப்புள்ள பைக்...காலாவதியான இன்சூரன்ஸ்" - #Zerodha உரிமையாளரை கிண்டலடித்த நெட்டிசன்கள்!
காலாவதியான இன்சூரன்ஸ் உள்ள விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற கோடீஸ்வரரை இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.
பெங்களூருவில் பிரபல கோடீஸ்வரரும் ஜீரோதா நிறுவனத்தின் உரிமையாளருமான நிகில் காமத் தனது தோழியுடன் விலையுயர்ந்த இரு சக்கர வாகனத்தில் செல்லும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கோடீஸ்வரர் இருசக்கர வாகனத்தில் செல்வது சாதரணமான ஒன்று தானே இதில் என்ன வியப்பு என நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் விஷயம் என்னவெனில் நிகில் காமத் விலையுயர்ந்த ரூ.18லட்சம் மதிப்புள்ள பஜாஜ் நிறுவனம் தயாரித்துள்ள இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் மற்றும் முகக் கவசம் அணிந்து சென்றுள்ளார். ஆனாலும் அவரை கண்டுபிடித்து அவரை வீடியோ எடுத்து நெட்டிசன்கள் வைரலாக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவரது வண்டி எண்ணை வைத்து அவரது மொத்த தகவல்களை எடுத்து ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள பைக் வாங்கிய உரிமையாளரை பைக்கிற்கான இன்சூரன்ஸை புதுப்பிக்கச் சொல்லுங்கள் என எழுதியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
ரூ.18 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை வைத்திருந்து என்ன பயன் அந்த வண்டிக்கான இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியவில்லையே என இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.
18 lakhs first owner. Please renew the insurance @nikhilkamathcio pic.twitter.com/vhzmTvalmn
— Jt Jones (@jonesyoutubejt) August 18, 2024
கடந்த 2010ம் ஆண்டு நிகில் காமத் மற்றும் அவரது சகோதரரான நிதின் ஆகிய இருவரும் இணைந்து ஜீரோதா எனும் நிதி சேவை மற்றும் பங்குச் சந்தை நிறுவனத்தை துவங்கினர். தற்போதைய நிலவரப்படி சுமார் ரூ.6000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டக்கூடிய நிறுவனமாக இது உள்ளது.