Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய டி.வி சீரியலில் Cameo கொடுக்கும் பில்கேட்ஸ்..!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடிக்கும் இந்தி சீரியலில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் கேமியோ ரோலில் தோன்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
06:34 PM Oct 23, 2025 IST | Web Editor
முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடிக்கும் இந்தி சீரியலில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் கேமியோ ரோலில் தோன்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisement

அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்டின் இணை நிறுவனர், பில்கேட்ஸ். மேலும் அவர் உலக பணக்காரர்களில் முன்னணி இடத்தில் உள்ளார்.

Advertisement

இந்த நிலையில்  முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான ஸ்மிருதி இரானி நடித்து வரும் 'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி 2' என்ற தொலைக்காட்சி தொடரில் பில் கேட்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தி வெளியான இத்தொடரின் முன்னோட்டத்தில் ஸ்மிருதி இரானி அமெரிக்கவில் உள்ள, யாரோ ஒருவருடன் வீடியோ காலில் பேசுவது போல அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஸ்மிருதி இரானியுடன் எதிர்முனையில் பேசியது பில்கேட்ஸ்தான் என்று தகவல்கள் வெளியனது. இந்த செய்தியை தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஸ்மிருதி இரானி உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக அமெரிக்காவின் பிரபல டி.வி. தொடரான 'தி பிக் பேங்க் தியரி' என்ற நிகழ்ச்சியிலும் பில்கேட்ஸ் கேமியோ தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
billgatesCameolatestNewssmrutiiranitvserial
Advertisement
Next Article