மழையில் பழுதடைந்த பைக் | நடந்தே சென்று உணவு டெலிவரி செய்த #Zomoto ஊழியர்!
கொட்டும் மழையில் நடந்தே சென்று உணவு டெலிவரி செய்த ஜொமோட்டோ ஊழியர் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளாது.
ஸ்விக்கி, ஜொமோட்டோ, உபர் போன்ற உணவு டெலிவரி ஆப்களால் ஹோட்டல்களில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக ஒருபுறம் புகார் வந்துகொண்டிருந்தாலும், இந்த ஆப்களால் இளைஞர்கள் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது என்ற உண்மையை மறுக்க முடியாது. இந்த ஆப்கள் பிரபலமான பிறகு, பல லட்சக்கணக்கான இளைஞர்கள், பெண்களுக்கு வேலை கிடைத்துள்ளது.
இதற்குக் குறைந்த அளவிலான கல்வித் தகுதி மட்டுமே போதுமானதாக இருப்பதால் நிறைய படிக்காத பலரும் எளிதாக இதில் இணைந்து உணவு டெலிவரி செய்து வருகின்றனர். குடும்பத்தை விட்டு பெரு நகரங்களில், தனியாக வேலை செய்யும் இளைஞர்களுக்கு உணவு டெலிவரி ஆப்கள்தான் மூன்று வேளையும் உணவு அளிக்கிறது.
இந்நிலியில், மும்பையில் நேற்று பெய்த கனமழையால் நகரின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில அலுவலகங்களில் உள்ள மக்கள் நீர்மட்டம் குறையும் வரை தவித்தனர். இதற்கு நடுவே, Zomato டெலிவரி ஏஜென்ட் ரஹத் அலி கான் தன் மைக் பழுதடைந்ததால் நடந்து சொன்று மூலம் இரண்டு ஆர்டர்களை டெலிவரி செய்தார். இதற்கு Zomato வாடிக்கையாளர் ஸ்வாதி மிட்டல், சமூக ஊடக செயலியான Threads இல் ரஹத் அலி கானுக்கான பாராட்டுக் குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.
"நாங்கள் உணவை ஆர்டர் செய்தோம், ரஹத்தின் பைக் பழுதடைந்தது, இருப்பினும் இந்த கனமழையில் தனது டெலிவரியை முடித்தார்!" கனமழையில் தெருக்களில் இருக்கும் டெலிவரி ஊழியர்களை நாம் உண்மையில் ஆதரிக்க வேண்டும். எங்கள் வாழ்க்கையை வசதியாக மாற்றியதற் நன்றி ராஹத்!” என்று அவர் Threads-ல் எழுதினார்.
“