Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பாஜகவுக்கு எங்களின் ஆதரவு இனி கிடையாது" - பிஜு ஜனதா தளம் அறிவிப்பு!

10:27 AM Jun 25, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்றத்தில் இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை என ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் முடிவு அறிவித்துள்ளது. 

Advertisement

கடந்த ஆட்சியில் பாஜகவுக்கு மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாததால் பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆதரவைப் பெற்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்றி வந்தது.  பிரச்னைகளின் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு என்ற கொள்கையை பிஜு ஜனதா தளம் பின்பற்றி வந்தது.  பாஜகவைச் சோ்ந்த ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், பிஜு ஜனதா தளம் ஆதரவுடன் ஒடிசாவில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வானார்.

அண்மையில்,  ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த,  சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் தோல்வியை சந்தித்தது.  இதையடுத்து, கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதலமைச்சராக இருந்துவந்த நவீன் பட்நாயக்,  தன் பதவியை ராஜினாமா செய்தார்.  அதேபோல் மக்களவை தேர்தலிலும் பிஜு ஜனதா தளம் தோல்வியை சந்தித்தது.  மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் வென்றன.  ஆளும் கட்சியாக இருந்த பிஜு ஜனதா தளம் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியவில்லை.

இந்நிலையில்,  கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டத்தை நவீன் பட்நாயக் கடந்த  24ம் தேதி நடத்தினார்.  அதில், மாநிலங்களவையில் பிஜு ஜனதா தளம் துடிப்புமிக்க எதிா்க்கட்சியாக செயல்பட வேண்டும்.  ஒடிசா மாநில மக்களின் பிரச்னைகளை முன்னிறுத்திப் பேச வேண்டும் என்று அவா் எம்.பி.க்களிடம் வலியுறுத்தினாா்.  பின்னா் பிஜு ஜனதா தளம் மூத்த எம்.பி. சஸ்மித் பத்ரா செய்தியாளா்களை சந்தித்து பேசினார்.

இதையும் படியுங்கள் : கள்ளக்குறிச்சி விவகாரம் - இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கின்றனர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்!

அப்போது பேசிய அவர் கூறியதாவது :

"ஒடிசாவின் நலன்களை மத்திய பாஜக அரசு தொடா்ந்து புறக்கணித்து வருகிறது. மாநிலத்தில் பல இடங்களில் கைப்பேசி சேவைத் தரம் மோசமாக உள்ளது.  மக்களுக்கு வங்கிச் சேவைகள் கூட முழுமையாகக் கிடைக்கவில்லை . மாநிலத்தில் வங்கிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதே இதற்கு காரணமாக உள்ளது.  நிலக்கரி சுரங்கங்கள் மூலம் ஒடிசாவுக்கு கிடைக்க வேண்டிய நியாமான பங்கை மத்திய அரசு தொடா்ந்து மறுத்து வருகிறது.  இது மாநில மக்களின் நலன்களுக்கு எதிரானது.  இனி மாநிலங்களவையில் பாஜகவை எந்த விஷயத்திலும் ஆதரிக்கப் போவதில்லை. முழுமையான எதிா்க்கட்சியாக செயல்பட்டு,  ஒடிசா மக்களின் நலன்களைக் காப்பாற்றுவோம்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Biju Janata DalBJPformer Odisha Chief Ministernaveen patnaikparliament
Advertisement
Next Article