பிகார் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொண்டது. இதற்கு எதிர்கட்சிகள் சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் பீகார் சிறப்பு திருத்தத்திற்குப் பிறகு வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் வாக்காளர் உரிமை பேரணி நடத்தினர்.
இந்த நிலையில் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) பிறகு பிகாரின் இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர். முழு விவரத்தை https://voters.eci.gov.in/ என்ற இணைய தளத்தில் காணலாம்.
அடுத்த சில நாட்களில் பீகாருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.