Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#BiharBridgeCollapse | மீண்டும் இடிந்து விழுந்த பாலம்... அதிர்ச்சியில் பொதுமக்கள்!

12:28 PM Aug 17, 2024 IST | Web Editor
Advertisement

பீகாரில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இன்று இடிந்து விழுந்தது.

Advertisement

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பீகாரில் 14 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதுதொடர்பாக 16 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர்கள் மீது துறைரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. கிஷன்கஞ்ச், அராரியா, கிழக்கு சம்பாரண், சிவன், சரண் மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் பாலங்கள் இடிந்து விழுந்தன.

இதனைத் தோடர்ந்து முதலமைச்சர் நிதீஷ் குமார் மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். மேலும், அவா் பாலங்களுக்கான பராமரிப்பு கொள்கையை உடனடியாக தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

பீகாரில் கங்கை நதியின் மீது இருந்த அகுவானி - சுல்தான்கஞ்ச் பாலத்தின் தூண்கள், கடந்த ஆண்டு இடிந்து விழுந்த நிலையில் அதனை புணரமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இந்த நிலையில், கட்டுமானப் பணியில் இருந்த பாலத்தின் மீதி பகுதிகளும், இன்று (ஆக. 17) காலை 8 மணியளவில் இடிந்து விழுந்தன.

இதுகுறித்து பேசிய மாவட்ட நீதிபதி அமித் குமார் பாண்டே, கட்டுமானத்தில் உள்ள பாலத்தின் முழு கட்டமைப்புமே தவறானது என்றும் பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஒப்பந்ததாரர், கட்டமைப்பை அகற்றி வருகிறார் எனவும் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Tags :
BiharBridgecollapseGanga
Advertisement
Next Article