For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சோகத்தில் முடிந்த #Bihar புனித நீராடும் பண்டிகை - உயிரிழப்பு 46ஆக அதிகரிப்பு!

08:26 AM Sep 27, 2024 IST | Web Editor
சோகத்தில் முடிந்த  bihar புனித நீராடும் பண்டிகை   உயிரிழப்பு 46ஆக அதிகரிப்பு
Advertisement

பீகாரில் நடைபெற்ற புனித நீராடும் பண்டிகையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

பீகாரில் ஜீவித்புத்ரிகா என்ற பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஜீவித்புத்ரிகா பண்டிகை நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் போது, தங்களுடைய குழந்தைகளின் நலன்களுக்காக பெண்கள் விரதம் கடைப்பிடிப்பது, பின்னர் குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள். இந்த பண்டிகையின்போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில், இந்த பண்டிகை கொண்டாட்டத்தில் பீகாரில் உள்ள கிழக்கு சம்பாரன், மேற்கு சம்பாரன், நாளந்தா, அவுரங்காபாத், கைமூர், பக்சார், சிவான், ரோத்தாஸ், சரண், பாட்னா, வைஷாலி, முசாபர்பூர், சமஸ்திபூர், கோபால்கஞ்ச் மற்றும் அர்வால் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நீரில் மூழ்கிய 43 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 37 பேர் குழந்தைகளும் உயிரிழந்தனர்.

அதில், மூன்று பேரின் உடல்கள் காணவில்லை, அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.இதுவரை 43 உடல்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன என பேரிடர் மேலாண் துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. இந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.

Tags :
Advertisement