Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பீகார் சட்டமன்றத் தேர்தல் - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக..!

பிகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
04:18 PM Oct 14, 2025 IST | Web Editor
பிகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
Advertisement

பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைமை வகிக்கும் பாஜக 101 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தலில் போட்டியிடுகிறது.

Advertisement

முதற்கட்ட தேர்தலில் போட்டியிடுவதாற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வழங்கிய கால அவகாசம் வரும் 15ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த சூழலில் பாரதிய ஜனதா கட்சி முதற்கட்டமாக 71 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

மேலும் மத்திய தேர்தல் குழு மீதமுள்ள 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்து ஓரிரு தினங்களில் அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பீகார் மாநிலத்தின் தற்போது துணை முதலமைச்சராக உள்ள சாம்ராட் சவுத்ரி தாராப்பூர் சட்டமன்ற தொகுதியிலும், மற்றொரு துணை முதலமைச்சரான விஜயகுமார் சின்கா லக்கிசாராய் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடவுள்ளனர்.

Tags :
BiharbiharelectionBJPCandidateListlatestNews
Advertisement
Next Article