For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பீகார் சட்டசபை தேர்தல் – காலை 11 மணி நிலவரப்படி 27.65% வாக்குகள் பதிவு!

பீகாரில் காலை 11 மணி நிலவரப்படி 27.65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
01:02 PM Nov 06, 2025 IST | Web Editor
பீகாரில் காலை 11 மணி நிலவரப்படி 27.65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் – காலை 11 மணி நிலவரப்படி 27 65  வாக்குகள் பதிவு
Advertisement

பீகார் சட்டசபை தேர்தல் இன்று முதல் கட்டமாக 121 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த 121 தொகுதிகளில் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் 18 மற்றும் 19 வயதானவர்கள் ஆவர். 122 பெண் வேட்பாளர்களும், ஒரு திருநங்கை வேட்பாளரும் அடங்குவர்.

Advertisement

இந்த நிலையில் முதற்கட்டமாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வரும் நிலையில் காலை 9 மணி வரை 121 சட்டமன்ற தொகுதிகளில் 13.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காலை 11 மணி நிலவரப்படி, பீகாரில் 27.65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement