For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#BiggBoss சீசன் 8 எப்போது? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

01:33 PM Sep 24, 2024 IST | Web Editor
 biggboss சீசன் 8 எப்போது  வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Advertisement

தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய புகழை பெற்று இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் ஒளிபரப்பாக இருக்கும் தேதி குறித்து தனியார் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisement

ஒரே வீட்டில் எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் 60 கேமராக்கள் முன்னால் பிரபலங்கள் வாழும் 100 நாட்களை படமாக்கி ரசிகர்களை கவர்ந்தது. முதல் சீசனில் இருந்து கடைசி சீசன் வரை ஒவ்வொரு வகையில் வித்தியாசம் காட்டி வந்தது. இருந்தும் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது கமல்ஹாசன் தான்.

ஆனால் தற்போது எட்டாவது சீசன் தொடங்கியிருக்கும் நிலையில் பிக் பாஸிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக கமல்ஹாசன் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அந்த இடத்திற்கு யார் வருவார் என ரசிகர்களிடம் மிகப்பெரிய கேள்வி எழுந்தது. பல பிரபலங்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு தற்போது விஜய் சேதுபதி தமிழ் பிக் பாஸ் சீசன் 8-ன் அடுத்த தொகுப்பாளராக மாறி இருக்கிறார். இதற்கான புரோமோக்களும் வெளியிடப்பட்டு விட்டது.

கடந்த சீசன் மிகப்பெரிய தோல்வி என தான் கூற வேண்டும். அதில் நடந்த ஏகப்பட்ட குளறுபடிகளால் தான் கமல்ஹாசனும் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த புதிய மாற்றங்களால் மேலும் பல புதிய முயற்சிகள் நிகழ்ச்சிக்குள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் முதல் எபிசோட்டான அறிமுக விழா அக்டோபர் ஆறாம் தேதி ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Tags :
Advertisement