#TVK முதல் மாநாட்டுக்கு நாளை பூமி பூஜை | கட்சித்தலைவர் விஜய் பங்கேற்கிறாரா?
தவெக முதல் மாநாடு பூமி பூஜையில் அக்கட்சியின் தலைவர் விஐய் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது இலக்கு என அறிவித்த விஜய், சமீபத்தில் தனது கட்சிக் கொடியையும், பாடலையும் அறிமுகப்படுத்தினார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செப். 23ம் தேதி நடைபெற இருந்த நிலையில், அக்.27ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் விழா நாளை (அக்.4ம் தேதி) காலை 6.30 மணி முதல் 8.30 க்குள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்கு பிறகு, மாநாட்டுக்கு பிரம்மாண்ட பந்தல் மற்றும் அமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளன.
இதையும் படியுங்கள் :“தோனியை விட ரோஹித் கேப்டன்ஷிப் சிறப்பாக இருக்கும்” – முன்னாள் கிரிக்கெட் வீரர் #HarbhajanSingh
இந்த மாநாட்டில் தவெகவின் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இந்த பூமி பூஜையில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பூமி பூஜையில் விஜய் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்களும் பங்கேற்கின்றனர். மேலும், இதில் சுமார் 500 பேர் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.