For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கும்பாபிஷேக விழா - தமிழ்நாடு முழுவதும் கோலாகலம்!

05:32 PM Sep 08, 2024 IST | Web Editor
கும்பாபிஷேக விழா   தமிழ்நாடு முழுவதும் கோலாகலம்
Advertisement

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் இன்று குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Advertisement

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இன்று குடமுழுக்கு வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாக்களில் ஏராளமாக பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று தமிழ்நாடே பக்தி கோலம் பூண்டது. கும்பாபிஷேகம் நடைபெற்ற சில கோயில்கள் குறித்து இங்கு காண்போம்.

குளித்தலை

குளித்தலை அருகே குப்பமேட்டுப்பட்டியில் மாரியம்மன், காளியம்மன் கோயில்களில்
கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் கொசூர், குப்பமேட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூர் ராமாரெட்டிபாளையம் கிராமத்தில் பழமைவாய்ந்த அருள்மிகு மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலானது பக்தர்கள் நிதியுதவியுடன் புதுப்பிக்கப்பட்டு, திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

யாகசாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில், வாஸ்து
சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள்
நடந்தது. இதனையடுத்து மேளதாளம் முழங்க சிவாச்சார்யார்கள் புனிதநீர்
கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதனைத் தொடர்ந்து கோயில்
ராஜகோபுரத்தின் கலசங்களில், புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித
நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட, சேடப்பட்டியில் அமைந்துள்ளது கோட்டை ஸ்ரீபெரிய பகவதியம்மன் கோயில். குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீகணபதி ஹோமம், ஸ்ரீசுதர்சன ஹோமம், ஸ்ரீமகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இன்று முதல் கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பூர்ணாஹூதியை தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு முத்தாய்ப்பாக தமிழில் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீகோட்டை பெரிய பகவதி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த விழாவில் திண்டுக்கல், ஆத்தூர், மதுரை, கோவை மற்றும் செம்பட்டி என சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து 25000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை திருவிழந்தூரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்விதரும் கடவுளான ஹயக்ரீவர் மற்றும் ஸ்ரீவேதாந்த தேசிகன் திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தால் பராமரிக்கப்பட்டு வரும் இக்கோயிலில், இன்று மகா சம்ப்ரோக்ஷணம்
எனப்படும் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

நெல்லை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களில் ஒன்றான நெல்லை மாவட்டம்
மானூர் அம்பலவாண சுவாமி திருக்கோயிலில் ரூபாய் 69 லட்சம் அரசு நிதியில்
திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோயிலில் கும்பாபிஷேக
சிறப்பு பூஜைகள், யாகம் நடத்தப்பட்டு இன்று காலை மகா கும்பாபிஷேகம்
நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலம் கிராமத்தின் கண்மாய் கரையில் அய்யனார், பேச்சியம்மன், சின்னச்சாமி காவல் தெய்வங்களின் கோயில் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோயிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அய்யனர் சுவாமிக்கு 51 அடியில் ராஜ கோபுரம், பேச்சியம்மன் மற்றும் சின்னசாமிக்கு 21 அடியில் கோபுரங்கள் எழுப்பப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பின் இன்று கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு
சிவகாமவள்ளி உடனுரை சம்பங்கி பிச்சாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை கிராமத்தில் சுமங்கலி காளியம்மன் மற்றும் பாதாள காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கடந்த ஐந்தாம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் இன்று காலை நிறைவுற்று, மேள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடாகி கோபுரத்தை வந்தடைந்தது.

பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமசையாக நடைபெற்றது. தொடர்ந்து 18 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட பாதாள காளியம்மனுக்கு மூலவர் கும்பாபிஷேகம் நடைபெற்று, மஹா
தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்
செய்தனர்.

Tags :
Advertisement