பெங்களூரு மைசூர் சாலையில் உள்ள கஸ்தூரிபா நகரில் வசிக்கும் 65 வயதான பெண், எப்போதும் போல் ஆன்லைன் தளத்தில் இருந்து பால் வாங்கினார். இந்நிலையில், வழக்கம் போல், மார்ச் 18 ஆம் தேதி அன்று பால் ஆர்டர் செய்தார்.  அது கெட்டுப்போனதைக் கவனித்த அந்த பெண் அதைத் திருப்பித் தர முடிவு செய்தார்.

இதையும் படியுங்கள் : டெல்லி ஜே.என்.யூ மாணவர் பெருமன்ற தேர்தல் : இடதுசாரிகள் கூட்டணி அபார வெற்றி – போட்டியிட்ட நான்கிலும் ABVP தோல்வி!

இணையதளத்தில் வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தேடினார். பின்னர் அந்த எண்னை  அழைத்து பேசினார். அந்த நபர் இவரிடம் பாலை திருப்பித் தராமல், பணத்தைத் திருப்பி பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, அந்த நபர் சில நடைமுறைகளைப் பின்பற்றும்படி கூறினார்.  UPI ஐடி எண்னை தனக்கு வாட்ஸ்அப் முலம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதையடுத்து, அந்த நபர் என்ன செய்கிறார் என்று தெரியாமல், அவர் கூறும் அனைத்து வழிமுறைகளைப் பின்பற்றினார்.

பின்னர் வாட்ஸ்அப்பில் அனுப்பிய எண்ணைச் சேர்த்த பிறகு UPI ஐடி விருப்பத்தை கிளிக் செய்தார். பணத்தைத் திரும்பப் பெற அவரது UPI பின் எண்ணை பதிவு செய்யுமாறு கூறியுள்ளார். அவர் தனது UPI பின்னை பதிவு செய்த போது, அவரது கணக்கில் இருந்து ரூ.77,000 டெபிட் செய்யப்பட்டது, அப்போதுதான் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.பின்னர் பைடராயனபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.