‘Work from Traffic’..... வைரலாகும் வீடியோ!
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர் ஆன்லைன் ஷூம் மீட்டிங்கில் கலந்து கொள்ளும் வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன நகரங்களுள் ஒன்று பெங்களூரு. அங்கு போக்குவரத்து நெரிசல் எப்படி இருக்கும் என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதனை எடுத்துகாட்டும் விதமாக பல வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வருவதை நாம் பார்ப்போம். மேலும் நெரிசலில் சிக்கிய மக்கள் பல சுவாரசிய செயல்களில் ஈடுபடும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகும். கடந்த சில நாட்களுக்கு முன்புகூட பேருந்து ஓட்டுநர் ஒருவர் இருக்கையில் அமர்ந்தே உணவு சாப்பிடும் வீடியோ வைரலானது.
Bengaluru promoted work-from-traffic culture like no one elsepic.twitter.com/8G3wphqERs
— SwatKat💃 (@swatic12) May 30, 2024
அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பெண் ஒருவர் தனது வேலை தொடர்பான ஆன்லைன் ஷூம் மீட்டிங்கில் கலந்து கொள்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. இதற்கு, ஸ்கூட்டர் ஓட்டி கொண்டே அலுவலகத்தின் மீட்டிங்கில் கலந்து கொள்வது என்பது கவன சிதறலை ஏற்படுத்தலாம் என பல நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றன. மேலும் பெங்களூரு வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதை தாண்டி ‘Work from Traffic’ என்ற வளர்ச்சியையும் கண்டுள்ளது என தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் பெங்களூரில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் டூவீலர்களின் பின்னால் அமர்ந்து கொண்டு, லேப்டாப் மூலம் நிறைய பேர் வேலை செய்து கொண்டே பயணம் செய்துள்ளனர்.