For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐபிஎல் 2025: லக்னோவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிப் பெற்றது.
06:47 AM May 28, 2025 IST | Web Editor
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிப் பெற்றது.
ஐபிஎல் 2025  லக்னோவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி
Advertisement

10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்த தொடரில், லீக் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடந்தது.

Advertisement

நேற்று லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் (70-வது) ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ரஜத் பட்டிதர் தலைமையிலான பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்தது.

லக்னோவில் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ், மேத்யூ ப்ரிட்க்ஷ் களமிறங்கினர். இதில் 14 ரன்களுக்கு மேத்யூ ஆட்டமிழக்க கேப்டன் ரிஷப் பண்ட் களமின்றங்கினார். தொடர்ந்து இந்த இணை அதிரடி காட்டியது. பின்னர் 67 ரன்களுக்கு 16வது ஓவரில் மார்ஷ் ஆட்டமிழக்க அடுத்ததாக பூரன் களமிறங்கினார். மறுபக்கம் பண்ட் ஆட்டமிழக்காமல் பவுண்டரி, ஃபோர் என அதிரடி காட்டினார்.

தொடர்ந்து சதம் விளாசினார். தொடர்ந்து பூரன் 19.3 ஓவர்களில் ஆட்டமிழக்க அப்துல் சமத் களமிறங்கினார். இறுதியாக 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்தது லக்னோ அணி. இதன்மூலம் பெங்களூருக்கு 228 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜிதேஷ் ஷர்மா 85 ரன்களும்.விராட் கோலி 54 ரன்களும் அடித்தனர். லக்னோ அணி தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கடைசி லீக்கில் ஆடிய பெங்களூரு அணி 9-வது வெற்றியை பெற்றதுடன், குஜராத் டைட்டன்சை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. இதனையும் சேர்த்து பெங்களூரு அணி இந்த சீசனில் வெளியூர்களில் இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு சீசனில் வெளியூர்களில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் (லீக் போட்டிகள் மட்டும்) வெற்றி பெற்ற முதல் அணி என்ற மகத்தான சாதனையை பெங்களூரு படைத்துள்ளது.

Tags :
Advertisement