பெங்களூரு - கொல்கத்தா ரயில் கட்டணம் ரூ.10,100? இணையத்தை திகைக்க வைத்த பதிவு!
பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவிற்கு ரயிலில் 2ம் வகுப்பு ஏசி பெட்டியில் செல்ல, பிரீமியம் தட்கலில் டிக்கெட் கட்டணம் 10,000 ரூபாய் என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்திய ரயில்வே செயலியான ஐஆர்சிடிசியில் பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவிற்கு ஹவுரா எக்பிரஸில் 2-ம் வகுப்பு ஏசி பெட்டியில் செல்ல, பயனர் ஒருவர் பிரீமியம் தட்கலில் டிக்கெட் புக் செய்ய முயன்றுள்ளார். அப்போது டிக்கெட் கட்டணம் ரூ.10,100 என வந்துள்ளது.
Who's booking such tickets?
byu/chuggingdeemer inindianrailways
இதுதொடர்பான ஸ்கீரின்ஷாட்டை ரெடிட் பக்கத்தில் பகிர்ந்த அந்த நபர், பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவிற்கு ரயில் டிக்கெட் கட்டணம் 2ம்வகுப்பு ஏசி பெட்டிக்கு வழக்கமாக ரூ. 2900 ஆக இருக்கும். இப்போது ரூ. 10100 என்று காட்டுகிறது. நிச்சயம் இந்த கட்டணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்து நான் போக மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கு பயனர்கள் பலர் கருத்துகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். சிலர் இதற்கு பதில் குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட் கிடைக்கும் போது அதிலேயே செல்லலாமே என தெரிவித்து வருகின்றனர். சிலர் இந்த கட்டணம் மிக அதிகமாக உள்ளது எனவும் தெரிவித்து வருகின்றனர்.