பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு - வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய NIA!
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் குண்டு வெடித்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டதை, தொடர்ந்து என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
பெங்களூருவில் உள்ள வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் மார்ச் 1 ஆம் தேதி 2 ஐஇடி குண்டுகள் வெடித்தன. இரண்டு வெடிப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தன. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்டமாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதன் மூலம் குற்றவாளியை அடையாளம் கண்டனர். அந்த குற்றவாளி சாம்பல் நிற சட்டை, கருப்பு பேன்ட், முகமூடி அணிந்த வாறு கையில் இரண்டு பைகளுடன் வந்துள்ளார். பின்னர் ராமேஸ்வரம் ஓட்டலில் உணவருந்திவிட்டு கைகழுவும் இடத்தில் வெடிகுண்டு உள்ள பையை வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.