17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்தியது பெங்களூரு!
ஐபிஎல் 2025 தொடரின் 8வது போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் நேற்று மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.
சென்னை அணியின் ஃபீல்டிங் சரியாக இல்லாததால் பெங்களூரு அணி அதிக ரன்களை குவிக்க எளிமையாக இருந்தது. இதனையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய சென்னை அணி எளிமையாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பெங்களூரு அணியின் ஃபீல்டிங்கால் ரன்களும் குவிக்க முடியவில்லை.
கடைசியாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை மட்டுமே சேர்த்தது சென்னை அணி. அஸ்வின் ரவிச்சந்திரனை தொடர்ந்து களமிறங்கிய தோனி கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களும், 1 பவுண்டரியும் அடித்து மொத்தமாக 30 ரன்கள் எடுத்து அணியில் ஸ்கோரை உயர்த்தினார்.
இருப்பினும் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிப் பெற்றது. இதன்மூலம் ஐபிஎல் லீக்கில் 2-வது வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு அணி. மேலும் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.