For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன் களத்தில் இறங்கி பல ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்" - கல்வியாளர் நெடுஞ்செழியன் பேட்டி!

08:11 PM May 27, 2024 IST | Web Editor
 புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன் களத்தில் இறங்கி பல ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்    கல்வியாளர் நெடுஞ்செழியன் பேட்டி
Advertisement

புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் களத்தில் இறங்கி பல ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என கல்வியாளர் நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

Advertisement

டெக்னோ கிரட்ஸ் இந்தியா காலேஜ் பைன்டர் கல்வி நிறுவனத்தின் சிறந்த மாணவியின்
கல்வி சாதனையை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறியதாவது,

” தற்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளில் படிக்க வைக்க
வேண்டும் என்றால் அதிக பணம் செலவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்,
இந்தியாவிலும் கூட அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நாங்கள் எண்ணற்ற மாணவர்களை பணம் அதிக அளவில் செலவழிக்காமல் நல்ல
மதிப்பெண்களை எடுக்க வைத்துள்ளோம்.

உதாரணமாக மாணவி நித்யாவை எடுத்துக் கொண்டோமானால் ஏழாம் வகுப்பு வரை
இந்தியாவில் படித்தார், பத்தாம் வகுப்பு வரை அமெரிக்காவில் படித்தார். மேலும்
பத்தாம் வகுப்பில் இருந்து எங்களது பயிற்சி மையத்தில் பயிற்சி அளித்தோம். இந்த மாணவி அமெரிக்காவில் படித்திருந்தாலும் அரசு கல்லூரிகளிலேயே படித்து வருகிறார். இவருக்கு அதிக வாய்ப்புகள் வெளிநாடுகளில் கிடைக்கின்றன.

நீங்கள் கல்வியை முன்னிலைப்படுத்தினால் எண்ணற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
நீங்கள் வேலையை தேட வேண்டாம், படிப்பை மட்டும் முன்னிலைப்படுத்தி ஆழமாக
கற்றால் பல வாய்ப்புகள் கிடைக்கும். இதன் பின்னர் நியூஸ்7 தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது..

பல்கலைக்கழகங்களை பொறுத்தவரை உலக அளவில் பார்த்தோம் என்றால்
தமிழக பல்கலைக்கழகங்கள் பின்தங்கி இருக்கிறது. பின் தங்கியிருக்கிறது என்பதைவிட முன்னேற்றம் அடைய என்னென்ன வழிவகைகள் செய்ய வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். கல்வியையும் அரசியலையும் பிரிக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். இவ்விரண்டையும் பிரிப்பது மிக எளிமையான காரியம் கிடையாது.

கல்வியும் அரசியலும் ஒன்றிணையாமல் இருந்தால் மட்டுமே கல்வியை காப்பாற்ற
முடியும். மாணவர்களுக்கு உலக அளவில் எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கிறது.

CUET என்ற தேர்வு நடைபெறுகிறது,இந்த CUET தேர்வுகளில் வினாத்தாள்கள் மிகவும்
கடினமாக கொண்டுவரப்பட்டுள்ளது. கல்விக் கொள்கையை ஆண்டுக்கு ஆண்டு மாற்ற
இயலாது. இந்திய தேசிய கல்வி கொள்கை பொருத்தவரை களத்தில் இறங்கி பல ஆய்வுகள்
செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

கல்வியைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னேற்றம்
அடைந்திருக்கிறது. கல்வி என்பது வேலை வாய்ப்புக்காக மட்டும் அல்ல, இது மிக
தவறான கருத்து. கல்வியைப் பொறுத்தவரை தான் கற்றுக் கல்வி எங்கு சென்றாலும் கை
கொடுக்கும் என்ற தன்னம்பிக்கை கொடுக்கும்.

வேலை வாய்ப்பு குறித்து பார்த்தோம் எனில் ஒரு நிறுவனம் 20 ஆண்டுக்கு பின்னர்
செயல்படுமா என்று பார்த்தால் மிகவும் கடினம். வேலை என்பதை பின்னிலைப் படுத்தி
கல்வியை முன்னிலைப்படுத்தினால் நமது சமுதாயம் கல்வியில் முன்னேற்றம் அடையும்.
கல்வி வேறு வேலை வேறு. மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் கல்வி
இன்றியமையாதது என நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement