For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"வீட்டிற்குள் வெளிநாட்டு நாய் வந்ததால், நம் நாட்டு நாய் தெரு நாய்கள் ஆகிவிட்டது" - சீமான்!

ஆசிரியர் தகுதித் தேர்வில் நீதிமன்றம் தலையீடு, சட்டமன்றம், பாராளுமன்றம் தேவையா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
07:25 AM Sep 04, 2025 IST | Web Editor
ஆசிரியர் தகுதித் தேர்வில் நீதிமன்றம் தலையீடு, சட்டமன்றம், பாராளுமன்றம் தேவையா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 வீட்டிற்குள் வெளிநாட்டு நாய் வந்ததால்  நம் நாட்டு நாய் தெரு நாய்கள் ஆகிவிட்டது    சீமான்
Advertisement

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "இந்த நாட்டின் நிர்வாகத்தை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும், நீண்ட காலமாக எது ஒன்றுமே நீதிமன்றத்தின் மூலமாக செயல்படுத்துவது என்பதை அதிகாரம் முடிவு செய்து கருக்கிறது. அப்படி என்றால் சட்டமன்றம் நாடாளுமன்றம் எதற்கு என்ற கேள்வி எழுகிறது. நீட் தேர்வு எழுத வேண்டுமா ? வேண்டாமா? என்பதை நீதிமன்றம் முடிவெடுக்கிறது,

Advertisement

கச்சத்தீவை மீட்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை நீதிமன்றம் முடிவெடுக்கிறது, காவிரியில் நீர் கொடுக்க வேண்டுமா? கொடுக்க வேண்டாமா? என்பதை நீதிமன்ற முடிவு செய்ய வேண்டும், முல்லைப் பெரியாறு அணையை கட்ட வேண்டுமா? வேண்டாமா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும், எதை ஒன்றையுமே நீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என்றால், சட்டமன்றம், பாராளுமன்றம் எதற்காக உள்ளது ?

அப்படியானால் மக்களாட்சி என்பது இங்கு சொல்லாட்சியாக மட்டும் தான் உள்ளது. இங்கு ஜனநாயகம் எங்கு இருக்கிறது. இந்த நாட்டின் அதிகாரம் யாரிடம் இருக்கிறது? எல்லாத்துக்கும் தேர்வு எழுத வேண்டும் என சொல்பவர்கள், அமைச்சர், பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வர் என ஏன் எந்த தேர்வும் எழுதுவது இல்லை. மருத்துவம், ஆசிரியர் உட்பட அனைத்திற்கும் தகுதியானவர்கள் வர வேண்டும் என நினைக்கிறார்கள், ஆனால் நாட்டை ஆளும் தலைவர்களுக்கு எந்த தேர்வும் இருப்பது இல்லையே ஏன் ?

இந்த தேர்வுகளால் தகுதி கூடி விடும் என எப்படி நினைக்கிறீர்கள். மீட்பை கொண்டு வந்தால் கல்விக் கொள்ளை குறைந்து விடும் எனக் கூறினீர்கள். ஆனால் நீட் பயிற்சி என செல்லும் பொழுது 5 லட்சம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. ஆனால் அதிலும் தேர்ச்சி பெற்று வந்தால் 35 லட்சம் வரை கட்டி படிக்க
வேண்டி உள்ளது. அப்படியே படித்தாலும் வெறும் எம்.பி.பி.எஸ்-க்கு எந்த மதிப்பும் இல்லை. மேற்கொண்டு படிக்க வேண்டிய நிலைமை உள்ளது. அப்படியானால், கோடிகளில் செலவு செய்து டாக்டருக்கு படித்து விட்டு வெளியே வர வேண்டிய நிலைமை இங்கு மாணவர்களுக்கு உள்ளது. கொள்ளை குறையும் எனக் கூறினீர்களே இங்கு எந்த கொள்ளை குறைந்தது. தகுதியான மருத்துவரை உருவாக்குவதற்கு பதிலாக இது போலி மருத்துவரை உருவாக்கி இருக்கிறது என்று கூறினார்.

பீகாரில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக கூறுவது பற்றிய கேள்விக்கு, காங்கிரஸ் இருக்கும் போது செய்ததைத் தான் பி.ஜே.பி தற்போது ஆட்சியில் இருக்கும் பொழுது செய்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது நேர்மையாக தான் வாக்குப் பதிவு நடந்தது என்பதை எங்கு வந்து சத்தியம் செய்வீர்கள். EVM எந்திரத்தில் இது போன்ற பிரச்சனைகள் நடக்கும் என்பது மூளை இருக்கும் அனைவருக்கும் தெரியும். EVM எந்திரத்தை எத்தனை நாடுகள் பயன்படுத்துகிறது என ராகுல் காந்தியை வந்து சொல்லச் சொல்லுங்கள்.
இந்த எந்திரத்தை தயாரித்துக் கொடுக்கும் ஜப்பான் இதை பயன்படுத்துகிறதா? மூன்றே நாடுகள் தான் இதை வைத்து இருக்கிறது.

பங்களாதேஷ், நைஜீரியா, மற்றும் இந்தியா. இவை மூன்றுமே ஊழலில் பெருத்த நாடுகள். பங்களாதேஷ் இதை தூக்கி எறிந்து விட்டது, தற்போது பங்களாதேஷும் இந்தியாவும் தான் இதை வைத்து இருக்கிறது.. அதில் முறைகேடு நடக்கிறது என்றால் அந்த முறையையே தூக்கி போட வேண்டியது தானே. உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்ளுங்கள், ஈரோடு கிழக்கு தேர்தலில், 25500 போடு நிறுத்தச் சொன்ன அந்த மகான் யாரு? இன்னும் ஒரு 500 ஓட்டு வாங்கி இருந்தால் நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறிவிடுவோம். நான் டிபாசிட்டை இழக்க வேண்டும் என நீங்கள் முடிவு செய்து இருக்கிறீர்கள்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அதை நிறுத்தி வைத்து விடுகிறார். கள்ள ஓட்டு போடும் போது தடுக்காத தேர்தல் ஆணையம் வாக்குக்கு காசு கொடுக்கும் போது தடுக்காத தேர்தல் ஆணையம், என்னுடைய வாக்கை நேர்மையாக எண்ணுவார்கள் என்பதை நான் நம்ப வேண்டுமா? அந்த எந்திரத்தில் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். ராகுல் காந்தி எந்திரத்தை தூக்கிப் போட்டு விட்டு பழையபடி வாக்குச் சீட்டுக்கு வாருங்கள் எனக் கூற வேண்டியது தானே என்று கூறினார்.

தெரு நாய்கள் குறித்து கமலஹாசன் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு, இதில் கமலஹாசன் கூறியது போல, கழுதை, சிட்டுக் குருவி, வண்ணத்துப் பூச்சிகள் போன்றவை அழிவின் விளிம்பிற்கு சென்று விட்டது. நான் எந்த அழிவிற்கும் கவலைப்படவில்லை. நாம் சக மனிதன் சாவையே சகித்துக் கொண்டு தான் செல்கிறோம்.

நாயை முற்றிலுமாக ஒழிப்பதால், எலிகள் பெருகும், பிளேக் நோய்கள் பெருகக் கூடிய ஆபத்து இருக்கிறது. எதையும் ஒரு சம நிலையில் வைக்க வேண்டும். இதற்காக மாநகராட்சி முறையாக நாய்களை பராமரித்து தடுப்பூசி செலுத்த வேண்டும். நீங்கள் அதைத் தெரு நாய் எனக் கூறுகிறீர்கள், ஆனால் அது தான் நம்முடைய வீட்டு நாய். நாம் வெளிநாடுகளில் இருக்கக் கூடிய உயர் தர நாய்களை வீட்டிற்குள் கொண்டு வந்ததால் இவைகள் தெரு நாய்கள் ஆகிவிட்டது. இது ஒரு பெரிய சந்தை, என் நாயை தெருவில் போட்டு விட்டு அவனின் நாயை வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டான்.

நாம் பிற நாடுகளை சார்ந்து இருப்பதாலேயே இவ்வளவு சரிவுகளை சந்திக்கிறோம். மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை நிச்சயம் நாம் சந்திக்க வேண்டிய நிலைமை இருக்கும். பங்களாதேசுக்கும் இலங்கைக்கும் வந்த பொருளாதார வீழ்ச்சி நம் நாட்டிற்கு வந்தால் நம்மால் தாங்க முடியாது. ஆனால் இந்தியா ஒரு துணை கண்டம், அவ்வளவு பெரிய பொருளாதாரம் பயிற்சி வந்தால் நம்மால் தாங்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement