For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தமிழக வீராங்கனைகளுக்கு பிசிசிஐ உரிய முக்கியத்துவம் அளிக்கிறது” - நிரஞ்சனா நாகராஜன்!

09:40 AM May 04, 2024 IST | Web Editor
“தமிழக வீராங்கனைகளுக்கு பிசிசிஐ உரிய முக்கியத்துவம் அளிக்கிறது”   நிரஞ்சனா நாகராஜன்
Advertisement

“தமிழக பெண் வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்  உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது” என இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கிரிக்கெட் வளாகத்தில் கோவை
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று தொடங்கியது.  சுமார் 12 அணிகள்
பங்கேற்றுள்ள இந்த போட்டியானது அடுத்த 30 நாட்கள் நடைபெற உள்ளது.  லீக்
மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த தொடரின் இறுதி போட்டிகள்
ஜூன் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.  நேற்று தொடங்கிய இந்த தொடரின் சிறப்பு விருந்தினராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன் அழைக்கப்பட்டிருந்தார்.  போட்டியை தொடங்கி வைத்தபின் நிரஞ்சனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“சிபிஎல் கோவை போட்டி தொடர் சிறப்பாக துவங்கி உள்ளது.  எந்த அளவுக்கு இந்த
போட்டிகள் சிறப்பாக நடைபெறுகிறதோ அந்த அளவிற்கு இந்திய கிரிக்கெட்டிற்கு இது உறுதுணையாக இருக்கும்.  இந்திய கிரிக்கெட்டை பொறுத்த வரை ஆண்களுக்கு நிகரான முக்கியத்துவம் பெண்களுக்கும் அளிக்கப்பட்டு வருகிறது.  மகளிர் கிரிக்கெட் புதிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  நல்ல ஒரு முன்னேற்றத்தையும் கண்டு வருகிறது.

தமிழக பெண் வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது.  தமிழ்நாடு கிரிக்கெட் வாரியமும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஊக்கமளித்து வருகிறது.  விரைவில் தமிழகத்தை சேர்ந்த மூன்று,  நான்கு பெண்கள் இந்திய அணியில் இடம் பெறுவார்கள்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம் பெறாதது ஏமாற்றம் தான்.  கண்டிப்பாக நடராஜன் இருந்திருக்க வேண்டும்.  இந்த உலகக் கோப்பை தொடரில் இடம் பெறாவிட்டாலும்,  அவர் விரைவில் பெரிய அளவில் எழுச்சி பெறுவார். அவரது யாக்கரை அடித்து கொள்ள ஆள் இல்லை” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement