பிரதமர் மோடிக்கு இந்திய அணியின் ஜெர்சியை வழங்கிய பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் பிரதமர் மோடிக்கு இந்திய அணியின் ஜெர்சியை வழங்கி சிறப்பித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. இதனையடுத்து பார்படாசில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா வந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை 11 மணிக்கு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
The triumphant Indian Cricket Team met with the Honourable Prime Minister of India, Shri Narendra Modiji, at his official residence today upon arrival.
Sir, we extend our heartfelt gratitude to you for your inspiring words and the invaluable support you have provided to… pic.twitter.com/9muKYmUVkU
— BCCI (@BCCI) July 4, 2024
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ரோஜர் பின்னி மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அகியோர் இணைந்து பிரதமர் மோடிக்கு 'நமோ 1' என்ற இந்திய அணியின் ஜெர்சியை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “உங்களது ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும், இந்திய அணிக்கு நீங்கள் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்..ஜெய்ஹிந்த்..!" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.