Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்த பிசிசிஐ பரிசீலனை!

03:30 PM Apr 25, 2024 IST | Web Editor
Advertisement

ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

இந்தியா கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் வீரர்கள், அணியில் வாய்ப்பில்லாத போதும், ஓய்வின் போதும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என சமீபத்தில் பிசிசிஐ அறிவித்திருந்தது. உள்ளூரில் விளையாடப்படும் இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள் உடல் தகுதியை நிரூபிப்பதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உருவாகிறது.

ஆனால் முக்கிய வீரர்கள் ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்ப்பதிலேயே குறியாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பிசிசிஐ ஆய்வு செய்த போது, போதிய அளவு ஊதியம் இல்லாததே ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்கு வீரர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதாக தகவல் வெளியானது.

இதையடுத்து ’டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத்தொகை திட்டம்’ என்ற திட்டத்தை பிசிசிஐ கடந்த மாதம் அறிவித்தது. இதன்படி ரஞ்சிக் கோப்பையில் விளையாடினால் வீரர்கள் தற்போது வாங்கி வரும் ஊதியத்தை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக ஊதியம் பெற முடியும் என கூறப்படுகிறது.

வருடத்திற்கு ரூ.75 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை அவர்கள் விளையாடும் ரஞ்சிக் கோப்பை போட்டிகளைப் பொறுத்து ஊதியம் வேறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் 40 ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாடினால் 60 ஆயிரம் ரூபாயும், 20 முதல் 40 ரஞ்சிக்கோப்பை போட்டிகளின் விளையாடினால் 50 ஆயிரம் ரூபாயும், 20 ரஞ்சிக்கோப்பை போட்டிகளுக்கும் குறைவாக விளையாடுபவர்களுக்கு நாளொன்றுக்கு 40 ஆயிரம் ரூபாயும் ஊதியமாக நிர்ணயிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
BCCICricketSalary
Advertisement
Next Article