பிசிசிஐ விருதுகள் 2019-23 : விருது வென்றவர்களின் பட்டியல்!
சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வழங்கப்படும் பிசிசிஐயின் நமன் கிரிக்கெட் விருதுகள் நேற்று ஹைதராபாத்தில் வழங்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆண்டுதோறும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கான விருதுகள் நேற்று வழங்கப்பட்டது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பிசிசிஐயின் நமன் கிரிக்கெட் விருதுகள் வென்றவர்களின் பட்டியல் ;
காலெனல் சி கே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது :
ஃபரூக் இன்ஜினியர், ரவி சாஷ்திரி வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.
சர்வதேச கிரிக்கெட் பாலி உம்ரிகர் விருது :
முகமது சமி (2019-20), ரவி அஸ்வின் (2020-21), ஜாஸ்பிரித் பும்ரா (2021-22), சுப்மன் கில் (2022-23), 2022-23 ஆண்டிற்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதை சுப்மான் கில் பெற்றார்.
சர்வதேச கிரிக்கெட் சிறந்த வீராங்கனைக்கான விருது :
2019-20 க்கு தீப்தி ஷர்மா, 2020-22 க்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் 2022-2023 க்கு தீப்தி ஷர்மா.
சர்வதேச கிரிக்கெட் சிறந்த அறிமுக வீரருக்கான விருது :
மயங்க் அகர்வால் (2019-20), அக்ஷர் படேல் (2020-21), ஸ்ரேயஷ் ஐயர் (2021-22), அமஞ்சோத் கௌர் (2022-23).
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் விளாசியவர்களுக்கான திலிப் சர்தேசாய் விருது :
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (2022-23)
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கான திலிப் சர்தேசாய் விருது :
ரவி அஸ்வின் (2022-23)
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகளுக்கான விருது :
பூனம் ரௌட் (2019-20), மிதாலி ராஜ் (2020-21), ஹர்மன்பிரித் கௌர் (2021-22), ஜெமிமா ரோட்ரிகஸ் (2022-23)
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனைகளுக்கான விருது :
பூனம் யாதவ் (2019-20), ஜுலான் கோஸ்வாமி (2020-21), ராஜேஸ்வரி கெய்க்வாட் (2021-22), தேவிகா வித்யா (2022-23).