குற்றாலத்தில் தொடர்ந்து 5-வது நாளாக குளிக்க தடை!
குற்றாலத்தில் தொடர்ந்து 5-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: கனமழையின் போது நெல்லை களக்காடு சுற்றுவட்டார கிராமங்களில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து நாசம்!
அந்த வகையில், குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் சூழலில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 5-வது நாளாக நீடிக்கிறது. மேலும் ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி மற்றும் புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.