For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புதுச்சேரி அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் காலி பானையை வைத்து நூதன போராட்டம்!

05:39 PM Jan 14, 2024 IST | Web Editor
புதுச்சேரி அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் காலி பானையை வைத்து நூதன போராட்டம்
Advertisement

புதுச்சேரியில் உள்ள பாசிக், பாப்ஸ்கோ அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் தங்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து காலி பானையை வைத்து பொங்கல் கொண்டாடும் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

Advertisement

புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனங்களான பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்கள் மூலம்
பெட்ரோல் பங்க், காய்கறி அங்காடி, மதுபான கடைகள், விவசாய ஈடுபொருள்கள் விற்பனை மையம் உள்ளிட்டவைகள் இயங்கி வருகிறது. இதில் 1000க்கும் மேற்பட்டோர்
பணியாற்றி வருகின்றனர். இதனிடையே, நிதி நெருக்கடி காரணமாக பாப்ஸ்கோ மற்றும்
பாசிக் நடத்தப்படாமல் இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 68 மாதங்களுக்கு மேலாக
ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இதனை கண்டித்து இதன் ஊழியர்கள் பல்வேறு
போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ, பாசிக் நிறுவனத்தை
உடனே திறந்து நடத்திட வலியுறுத்தியும், 68 மாதங்களுக்கு மேலாக ஊழியர்களுக்கு
வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்கிட வலியுறுத்தியும், வெறும்
பானைக்கு பட்டை நாமம் போட்டு அரிசி, வெள்ளம் இல்லாமல் பொங்கல் கொண்டாடும் நூதன போராட்டத்தில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட அரசு சார்பு ஊழியர்கள்
ஈடுப்பட்டனர். அப்போது, அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன
முழக்கங்களையும் எழுப்பினர்.

Tags :
Advertisement