#BANvsSA | வங்கதேச அணியை 106 ரன்னில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தென்னாப்பிரிக்க அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று (அக்டோபர் 21) தொடங்கியது.இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேசம் அணியில் தொடக்க ஆட்டக்காரர் மஹ்மதுல் ஹாசன் ஜாய் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, தைஜுல் இஸ்லாம் 16 ரன்களும், மெஹிதி ஹாசன் மிராஸ் 13 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படியுங்கள் : Sorgavaasal | இணையத்தில் கவனம் ஈர்க்கும் ஆர்.ஜே.பாலாஜியின் “சொர்க்கவாசல்” டீசர்!
இறுதியில் நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 106 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்துள்ளது. அதில்,அய்டன் மார்க்ரம் (6 ரன்கள்), டோனி டி ஸார்ஸி (30 ரன்கள்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (23 ரன்கள்), டேவிட் பெடிங்ஹம் (11 ரன்கள்) மற்றும் ரியான் ரிக்கல்டான் (27 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். கைல் வெரைன் 18 ரன்களுடனும், வியான் முல்டர் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்க அணி 34 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.