"பங்களாதேசத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்" - பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி!
மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளரிடம் பேசினார். அப்போது,
"பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் தமிழகம் வந்து தமிழகத்திலிருந்து இலங்கை சென்று இருப்பதாக செய்திகள் வந்திருந்தது. எனக்கு அதில் ஒரு சந்தேகம் ஏன் அவர்கள் தமிழகத்திலேயே தங்கி இருக்கக் கூடாது. எனவே தமிழக முதல்வர் தனிக் கவனம் செலுத்தி தீவிரவாதிகளை கண்காணிக்க வேண்டும். பங்களாதேஷத்தில் இருந்து பல்வேறு நபர்கள் இங்கே தங்கி உள்ளார்கள். அவர்களை உடனடியாக தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்ற நபர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் காஷ்மீருக்கு 370 வது சிறப்பு அந்தஸ்து வழங்கி செயல்பட்டு வந்த நிலையில் அங்கே தீவிரவாதம் தலை தூக்குவதை கண்டு 370 வது சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ஜம்மு காஷ்மீர் பகுதி முழுமையான வளர்ச்சி அடைய வேண்டுமென்பதற்காக பாரத பிரதமர் வேலை வாய்ப்புகள் தொழில் வளர்ச்சிகள் ஏற்படுத்த பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.