Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கரன்சி நோட்டுகளில் இருந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் படத்தை நீக்கும் வங்கதேசம்!

12:25 PM Dec 06, 2024 IST | Web Editor
Advertisement

வங்கதேசம் அதன் கரன்சி நோட்டுகளில் இருந்து, ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படத்தை நீக்கும் செயல்முறையை தொடங்கியுள்ளது.

Advertisement

வங்கதேசத்தில் அண்மையில் நடந்த மாணவர்களின் போராட்டத்தால், அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து இடைக்கால பிரதமராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். இந்நிலையில் இந்த இடைக்கால அரசு தங்களது நாட்டின் கரன்சி நோட்டுகளில் உள்ள ஷேக் ஹசீனாவின் தந்தை, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படத்தை நீக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.

அதாவது வங்கதேசம் புதிய கரன்சி நோட்டுகளை அச்சிட முடிவெடுத்துள்ளது. அதில் மதம் சார்பான கட்டமைப்புகள், பெங்காலி பாரம்பரியம் மற்றும் போராட்டத்தின்போது தீட்டப்பட்ட Graffiti ஆகியவை இடம் பெற வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பத்திரிக்கை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

டாக்கா 20, 100, 500 மற்றும் 1000 கரன்சிகளை அச்சிட, மத்திய வங்கிக்கு இடைக்கால அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த புதிய நோட்டுகளில் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படம் இருக்காது என வங்கியை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “அடுத்த ஆறு மாதத்திற்குள் புதிய நோட்டு சந்தையில் வெளியிடப்படும்” என வங்கியின் நிர்வாக இயக்குனர் ஹுஸ்னேரா ஷிகா கூறியுள்ளார்.

முதற்கட்டமாக நான்கு நோட்டுகளின் வடிவமைப்பு மாற்றப்படுகிறது. மற்றவை படிப்படியாக மாற்றபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனாவின் தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மான் வங்கதேச அரசு உருவாக முக்கிய காரணமாக அமைந்தவர் என்பதும், அவர் வங்கதேசத்தின் தேசத்தந்தை என அழைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
BangladeshBank NotesInterim GovernmentSheikh HasinaSheikh Mujibur Rahman
Advertisement
Next Article