வங்கதேச விமான விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 31ஆக அதிகரிப்பு!
வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி வளாகத்தில் விமானப்படையின் பயிற்சி விமானமான F-7 BGI கட்டுப்பாட்டை இழந்து நேற்று முன்தினம் பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் உத்தரா பகுதியில் உள்ள பள்ளி கட்டிடம் மீது விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் என 20 பேர் உயிரிழந்திருந்தனர். மேலும் 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்தது.
அவர்களில் பெரும்பாலானவர்கள் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய வங்கதேச விமானப்படையால் உயர் மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.