For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வங்கதேசம் : பள்ளி மீது போர் விமானம் விழுந்து விபத்து - 27 பேர் உயிரிழப்பு!

வங்கதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
11:49 AM Jul 22, 2025 IST | Web Editor
வங்கதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
வங்கதேசம்   பள்ளி மீது போர் விமானம் விழுந்து விபத்து   27 பேர் உயிரிழப்பு
Advertisement

வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி வளாகத்தில் விமானப்படையின் பயிற்சி விமானமான F-7 BGI கட்டுப்பாட்டை இழந்து நேற்று பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் உத்தரா பகுதியில் உள்ள பள்ளி கட்டிடம் மீது விழுந்து நொறுங்கியது.

Advertisement

இந்த விபத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் என 20 பேர் உயிரிழந்திருந்தனர். மேலும் 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று சிகிக்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. விபத்திற்கான காரணத்தை கண்டறிய வங்காளதேச விமானப்படை, உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்த சம்பவம், உத்தரா பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக இன்று துக்க தினமாக அரசு அறிவித்துள்ளது.

Tags :
Advertisement