For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நேபாளத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது வங்கதேச அணி!

10:49 AM Jun 17, 2024 IST | Web Editor
நேபாளத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது வங்கதேச அணி
Advertisement

டி20 உலகக்கோப்பை  தொடரில் நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.

Advertisement

9வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் இன்று நடைபெற்ற 37-வது லீக் போட்டியில் வங்கதேசம் - நேபாளம் அணிகள் மோதின.  இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாள அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து வங்கதேச அணி பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதல் தடுமாற்றத்துடன் விளையாடிய அந்த அணி, 19.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் எடுத்தது.   அந்த அணியில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 17 ரன்களும் மஹ்மதுல்லா மற்றும் ஹொசைன் தலா 13 ரன்களும் எடுத்தனர். நேபாள அணி தரப்பில் சோம்பால் கமி, திபேந்திர சிங், கேப்டன் ரோஹித் பவுடல், சந்தீப் லாமிச்சானே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.  இதனையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நேபாள அணி களமிறங்கியது.

அந்த அணியில் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்த குஷால் மல்லா 27 ரன்களும்,  திபேந்திர சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஆசிப் ஷேக் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து களம் இறங்கிய பேட்ஸ்மேன்கள் சமகால இடைவேளையில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 19.2 ஓவர்கள் முடிவில் நேபாள அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி வங்கதேசம் அணி வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.

Tags :
Advertisement