For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு - கோவையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!

11:36 AM May 21, 2024 IST | Web Editor
பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு   கோவையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை
Advertisement

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் இருவேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

Advertisement

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில்,  கடந்த மார்ச் 1 ஆம் தேதி 2 ஐஇடி குண்டுகள் வெடித்தன.  இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தன.  இந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.  இந்த சம்பவம் குறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி  வந்தனர்.  இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைத்தது.

இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய என்ஐஏ அதிகாரிகள்,  அப்துல் மதீன் டஹா மற்றும் முசவீர் ஹசன் ஆகிய 2 பேரை கடந்த மாதம் 12ம் தேதி மேற்குவங்கத்தில் கைது செய்தனர்.  இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பாக கோவையில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.  கோவை பெரிய சுப்பண்ண கவுண்டர் லேஅவுட்டை சேர்ந்த டாக்டர் நஹீம் மற்றும் சாய்பாபா காலனியில் உள்ள நாராயணகுரு சாலையைச் சேர்ந்த டாக்டர் ஜாபர் இக்பால் ஆகியோரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  காலை 5 மணிக்கு துவங்கிய சோதனையானது 8 மணி அளவில் நிறைவு பெற்றது.

குண்டுவெடிப்பு தொடர்பாக டாக்டர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement