Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நீரிழிவு நோயாளிகளுக்கான வாழைப்பழம்...விரைவில் அறிமுகம்!

08:58 AM Aug 22, 2024 IST | Web Editor
Advertisement

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடும் வகையில் கண்டறியப்பட்டுள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட வாழை அடுத்தாண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

Advertisement

நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடும் வகையில் கண்டறியப்பட்டுள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட வாழை ரகங்களை விவசாயிகளுக்கு அடுத்தாண்டு அறிமுகம் செய்ய உள்ளதாக திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆர்.செல்வராஜன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது;

வாழை விவசாயிகளுக்காக 31 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை என்ஆர்சிபி நிகழ்த்தியுள்ளது. கடந்தாண்டு காவிரி காஞ்சன், காவிரி வாமன் என இரண்டு ரகங்களை அறிமுகம் செய்தோம். தற்போது இந்த இரு ரகங்களையும் மத்திய ரகங்களாக வெளியிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேபோல நுமரன், மனோரஞ்சிதம் ஆகிய இரு வாழை ரகங்களை டெல்லியில் உள்ள தாவர ரகங்கள் மற்றும் விவசாயிகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தில் பதிந்துள்ளோம். முன்பு திசு வளர்ப்பு முறையில் 70 ஆயிரம் கன்றுகள் வரை மட்டுமே உற்பத்தி செய்த நிலையில், இப்போது 2.40 லட்சம் கன்றுகளை உற்பத்தி செய்து வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த பண்ணையாக வாழை ஆராய்ச்சி மையத்தை மாற்றியுள்ளோம். இந்த மையத்தின் மூலம் நாடு முழுவதும் 3.57 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்” என தெரிவித்தார்.

Advertisement
Next Article