For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அக்.11-ம் தேதி #OTT-ல் வெளியாகிறது ‘வாழை’...

08:09 AM Sep 26, 2024 IST | Web Editor
அக் 11 ம் தேதி  ott ல் வெளியாகிறது ‘வாழை’
Advertisement

‘வாழை’ படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகிறதுஎன படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான ‘வாழை’ இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார்.

இந்த படம் ரசிகர்கள் உணர்ச்சி ரீதியாக உடைந்துவிடும் அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்தது. இதனால் படம் பார்த்த பலரும் வெளிவரும் அழுதுகொண்டே வெளியே வந்தனர். ரசிகர்களின் பாராட்டு வார்த்தைகளால் படத்துக்கு வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது. மூன்றாவது வாரத்திலும், கோட் ரிலீஸுக்குப் பின்னரும் கணிசமான தியேட்டர்களில் இந்த படம் ஓடிவருவதே இதன் வெற்றியை கோடிட்டு காட்டுகிறது. இதையடுத்து சமீபத்தில் படக்குழிவினர் 25 ஆவது நாள் வெற்றி விழாவைக் கொண்டாடினர்.

இந்நிலையில் இந்த படம் செப்டம்பர் மாத இறுதியில் ஓடிடியில் ரிலீஸாகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அக்டோபர் 11 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது சம்மந்தமான அறிவிப்பை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags :
Advertisement