For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#வாழை | "உங்களை கலங்கடிக்கச் செய்யும் உலகத்திற்குள் நுழையத் தயாராகுங்கள்" - #ActorDhanush பதிவு!

08:06 PM Aug 22, 2024 IST | Web Editor
 வாழை    உங்களை கலங்கடிக்கச் செய்யும் உலகத்திற்குள் நுழையத் தயாராகுங்கள்     actordhanush பதிவு
Advertisement

உங்களை கலங்கடிக்கச் செய்யும் உலகத்திற்குள் நுழையத் தயாராகுங்கள் என வாழை படம் குறித்து நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார்.

Advertisement

மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் வாழை . சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலையரசன், நிகிலா விமல், ஜே.சதிஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. ரெட் ஜயண்ட் மூவீஸ் இப்படத்தை விநியோகம் செய்கிறது. நாளை இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

வாழை திரைப்படத்தின் சிறப்பு திரையிடல்  நடைபெற்றது. தமிழ் திரையுலகின் பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தை பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சிறப்பு திரையிடலை திரையரங்கில் படம் பார்த்த அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜை கட்டி அணைத்து அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் வாழை படத்தை பற்றியும் மாரி செல்வராஜ் குறித்தும் உணர்ச்சிப்பூர்வமாக தனது எக்ஸ் தள பக்கத்தில் எழுதியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது..

“ சிரிக்கவும், கைத்தட்டவும், அழவும் தயாராகுங்கள். உங்களை கலங்கடிக்கச் செய்யும் உலகத்திற்குள் நுழையத் தயாராகுங்கள். உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படும் அழகான படைப்பு 'வாழை'. இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் “ என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

இதேபோல நடிகர் கார்த்தியும் வாழை திரைப்படத்தை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது..

நம் பால்ய வருடங்களை அனைவராலும் நினைவு கூற முடியும். ஆனால் அதையே ஒரு திரைக்காவியமாய் படைத்து அதில் நம்மை உள்ளிழுத்து நமக்கு மிக நெருக்கமானவராய் ஆகிவிட்டார் மாரி. சந்தோஷின் இசையையும் தேனி ஈஸ்வரின் காட்சியையும் பயன்படுத்தி வாழ்க்கையின் நிதர்சனத்தையும் வலிகளையும் அழகாய் சொல்லியிருக்கிறார். நடிப்பு என்று எதையும் சொல்லி விட முடியாது அவ்வளவு யதார்த்தம். வாழை பார்த்தபின் மாரி செல்வராஜ் மீது பெரும் அன்பு உண்டாகிறது.” என பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement